தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு சோதனையை ட்ராய் நடத்தியது

प्रविष्टि तिथि: 13 JAN 2026 12:03PM by PIB Chennai

மும்பையில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் இச்சோதனை நடத்தப்பட்டது.

நகர்ப்புற பகுதிகள், ரயில்வே மற்றும் கடலோரப் பகுதிகளில் பொது போக்குவரத்துப் பகுதிகள், நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கியப் பகுதிகள், அதிவிரைவு போக்குவரத்து முனையங்கள் போன்றவற்றில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.

2025 நவம்பர் 3 முதல் 7 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 192.4 கிமீ நகர்ப்புற பகுதி, 7 முக்கிய இடங்கள், 3.1 கிமீ தொலைவிற்கு நடந்து சென்று சோதனை செய்தல், 9.7 கிமீ தொலைவிற்கு கடலோரப் பகுதி, 115 கிமீ தொலைவிற்கு உள்ளூர் ரயில்வே பகுதிகள் உட்பட 320.2 கிமீ தொலைவிற்கு மும்பையில் இச்சோதனை நடத்தப்பட்டது.

இதன் மூலம் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி ஆகியவற்றின் தொழில்நுட்ப செயல்பாடு குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் விரிவான அறிக்கை www.trai.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.  விரிவான விவரங்களுக்கு பெங்களூரு பிராந்திய அலுவலக ஆலோசகர் திரு பிரஜேந்திர குமாரை adv.bengaluru@trai.gov.in என்ற மின்னஞ்சலில் அல்லது +91-80-22865004 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214061&reg=3&lang=1

***

AD/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2214081) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी