விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பாண்டு ரபி பருவகால பயிரிடலின் பரப்பளவு 17.65 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 12 JAN 2026 4:47PM by PIB Chennai

நாட்டில், ரபி பருவத்தில் பயிர்கள் பயிரடப்பட்டுள்ள மொத்த பரப்பளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 17.65 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. 9 ஜனவரி 2026 நிலவரப்படி, கோதுமை நடப்பாண்டில் 334.17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரடப்பட்டுள்ளது. இது 2024-25 காலகட்டத்தைக் காட்டிலும் 6.13 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும். இதேபோல் நெல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 2.22 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து 21.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரடப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு நடப்பாண்டில் 3.74 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் 96.86 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன (இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.53 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும்).

ஒட்டுமொத்தமாக ரபி பருவத்தில், கடந்த ஆண்டில் பயிரிடப்பட்ட பரப்பளவை (626.64 லட்சம் ஹெக்டேர்) விட அதிகமாக நடப்பாண்டில் 9 ஜனவரி 2026 நிலவரப்படி, 644.29 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213798&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2213909) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Punjabi , English , Urdu