சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா
प्रविष्टि तिथि:
10 JAN 2026 5:20PM by PIB Chennai

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தில் , 434-வது அணியைச் சேர்ந்த 1,384 இளம் காவலர்களின் பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனர் திரு. ஞானேந்திர பிரதாப் சிங், அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில், சிஆர்பிஎப் பயிற்சிப் பிரிவு சிறப்புத் தலைமை இயக்குனர் திரு. தீபக் குமார், தெற்கு மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் திரு. ரவி தீப் சிங் சாஹி, தெற்கு செக்டார் ஐ.ஜி. திரு. டி. விக்ரம், பயிற்சிப் பிரிவு ஐ.ஜி. திரு. சந்தீப் தத்தா மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த வீரர்களைப் பாராட்டிப் பேசிய தலைமை இயக்குனர் திரு. ஞானேந்திர பிரதாப் சிங், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதில் சிஆர்பிஎப் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் இருந்து வந்துள்ள வீரர்கள் அனைவரும், தற்போது தேசச் சேவை என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக,
ஆவடி பயிற்சி மையத்தின் டிஐஜி/முதல்வர் திரு. எம்.ஜே. விஜய், பயிற்சியின் பாடத்திட்டம் குறித்து விளக்கினார். இதில் உடற்பயிற்சி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், அடர்ந்த வனப்பகுதியில் உயிர்வாழும் கலை, போர் யுக்திகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக மல்லக்கம்பம், சிலம்பம், ஆயுதமற்ற போர்முறை, போர் யுக்திகள், யோகா மற்றும் கயிறு ஏறுதல் போன்ற வீரர்களின் தொழில்முறை சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சியின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்குத் தலைமை இயக்குனர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கியதற்காக காவலர் கரே விஷால் கல்ராம் 'சிறந்த பயிற்சியாளர்' விருதினைப் பெற்றார். உதவி கமாண்டன்ட் திரு. பி.வி. சிங் ஜோதா தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. முடிவில், தலைமைப் பயிற்சி அதிகாரி திரு. பவன் குமார் திவாரி நன்றியுரை ஆற்றினார்.
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2213266)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English