சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நகைக் கடை உரிமையாளர்களுக்கு ஹால்மார்க் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

प्रविष्टि तिथि: 10 JAN 2026 2:32PM by PIB Chennai

 

தங்கம், வெள்ளி நகைகளுக்கான பிஐஎஸ் ஹால்மார்க்கிங் திட்டம் குறித்த நகைக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் சார்பில், மதுரையில் 09.01.2026 அன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 120 பேர் பங்கேற்றனர்.

பிஐஎஸ், கோயம்புத்தூர் அலுவலக விஞ்ஞானி மற்றும் தலைவர் திருமதி ஜி. பவானி தொடக்கவுரையாற்றி, பங்கேற்பாளர்களை வரவேற்றார். இந்தியாவில் ஹால்மார்க்கிங் திட்டத்தின் வரலாறு, வளர்ச்சி, தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஹால்மார்க்கிங் செய்வதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து அவர் விரிவாக உரையாற்றினார்.

பிஐஎஸ் இயக்குநர் திரு. வி. ரமேஷ் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினார். பிஐஎஸ் அமைப்பு, 2000-ம் ஆண்டிலேயே ஹால்மார்க்கிங் திட்டத்தைத் தொடங்கியிருந்தாலும், இதன் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என்றும், இதில் மேலும் முன்னேற்றம் தேவை என்றும் குறிப்பிட்டார்.

இதில் நகைக்கடைக்காரர்களைப் பதிவு செய்வதற்கான கொள்கை, அதற்கான நடைமுறை, விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல் ஆகியவை குறித்து இந்த நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. பிஐஎஸ் சட்டம், ஹால்மார்க்கிங் தொடர்பான விதிமுறைகள் உட்பட, சட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் ஏற்படும் நன்மைகளும் நிகழ்ச்சியில் விரிவாக விளக்கப்பட்டது.

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2213224) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English