சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மனோஜ் குமார் குப்தா நியமனம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JAN 2026 8:05PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி திரு. மனோஜ் குமார் குப்தாவை, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
தற்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் திரு. குகநாதன் நரேந்தர், 2026 ஜனவரி 9 அன்று பணி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. திரு. மனோஜ் குமார் குப்தா அவர்கள் தனது பொறுப்பை ஏற்கும் தேதியிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212612®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212612
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2213171)
வருகையாளர் எண்ணிக்கை : 74