பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உலகளாவிய எரிசக்தி பேச்சுவார்த்தை மற்றும் விநியோகத்தை நிலைநிறுத்தும் இந்திய எரிசக்தி வாரம் 2026 மாநாடுகள்
प्रविष्टि तिथि:
09 JAN 2026 5:18PM by PIB Chennai
இந்த ஆண்டின் முதலாவது பெரிய சர்வதேச எரிசக்தி துறைகளின் சந்திப்பாக, 2026, ஜனவரி 27 முதல் 30 வரை கோவாவில் இந்திய எரிசக்தி வாரம் 2026 நடைபெறவுள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தைகள், புவிசார் அரசியல் மற்றும் பருவநிலை நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய தருணத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு 120-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களையும் 6,500-க்கும் அதிகமான மாநாட்டுப் பிரதிநிதிகளையும் ஒன்றிணைக்கிறது.
இந்த மாநாட்டில் அரசின் மூத்த பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உலகளாவிய எரிசக்தி அமைப்பு எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்கள் குறித்துப் பேச்சு நடத்துவார்கள். 65 க்கும் மேற்பட்ட உயர் நிலை அமர்வுகளில் 300 க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எரிசக்தி அமைச்சகங்கள், உலகளாவிய எரிசக்தி நிர்வாகத்தை வடிவமைக்கும் பன்முக அமைப்புகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க மற்றும் வளர்ந்து வரும் தூய்மை எரிசக்தி தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சர்வதேச தொழில்துறை தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
உலகளாவிய எரிசக்தி மாற்றத்தின் முக்கிய பரிமாணங்களை சரி செய்யும் பத்து உத்திசார் கருப்பொருள்கள் விவாதங்களின் மையமாக இருக்கும். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மீள்தன்மை, சர்வதேச ஒத்துழைப்பு, முதலீடு திரட்டல், டிஜிட்டல்மயமாக்கல், பணியாளர் மேம்பாடு, எரிசக்தி சமத்துவம் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மாற்றம், பெட்ரோலியப் பொருட்கள், ஹைட்ரஜன், உயிரி எரிபொருள்கள், எதிர்காலப் போக்குவரத்து, திரவ எரிவாயு , மின்சார அமைப்புகள், சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ ரசாயனம், போன்றவற்றை உள்ளடக்கியது.
அறிவைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், எரிசக்தி அமைப்புகள் முழுவதும் நடைமுறை சவால்களை எதிர்கொள்ளவும் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்பம் வழங்குநர்களுக்கு தொழில்நுட்ப மாநாடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
கூடுதல் தகவல்களுக்கு https://www.indiaenergyweek.com/ என்ற இணைய தளத்தைப் பார்வையிடவும்
TV/KR
(रिलीज़ आईडी: 2212950)
आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English