சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை புத்தகக் கண்காட்சியில் அஞ்சல் துறை சேவை

प्रविष्टि तिथि: 08 JAN 2026 6:37PM by PIB Chennai

சென்னை நந்தனம் ஒய்.ம்.சி.ஏ மைதானத்தில் 08.01.2026 முதல் 21.01.2026 வரை நடைபெறும் 49-வது புத்தகக் கண்காட்சியில் இந்திய அஞ்சல் துறை பங்கேற்று, பல சிறப்பான சேவைகளை அளிக்கிறது. பார்வையாளர்கள் தாங்கள் வாங்கும் புத்தகங்களை தபால் மூலம் மற்ற இடங்களுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக பார்சல் பேக்கிங் மற்றும் புக்கிங் சேவை இந்தக் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பார்சல் பேக்கிங் செய்வதற்கான பேக்கிங் பாக்ஸ், இதர பொருட்கள் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் தங்களுக்கான பிரத்யேகமான ஸ்டாம்ப்புகளை ப்ரிண்ட் செய்து கொள்வதற்கான “மை ஸ்டாம்ப்" அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் வசதிக்காக புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதார் புதுப்பித்தல் / திருத்தம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஆதார் சேவை அரங்குகள் புத்தக கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

----

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2212573) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English