சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
காயகல்ப் விருது - ஜிப்மருக்கு தேசிய அங்கீகாரம்
प्रविष्टि तिथि:
07 JAN 2026 2:36PM by PIB Chennai
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 2024-2025 ஆம் ஆண்டிற்கான காயகல்ப் விருது திட்டத்தின் கீழ், ஜிப்மர் மருத்துவமனை ₹40,00,000/- (நாற்பது லட்சம் ரூபாய் மட்டும்) ரொக்கப் பரிசோடு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. காயகல்ப் விருதுத் திட்டமானது, நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார வசதிகளில் தூய்மை, சுகாதாரம், நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த தர மேம்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க தேசிய அளவிலான அங்கீகாரம் குறித்து ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி அவர்கள், ஜிப்மர் மருத்துவமனை தூய்மை, உயிரிமருத்துவக் கழிவு மேலாண்மை, நோய்த்தொற்று கட்டுப்பாடு, பொதுமக்களின் கருத்து பெறும் அமைப்பு, காயகல்ப் மற்றும் தூய்மை இந்தியா வழிகாட்டுதல்களைக் பின்பற்றுவதுடன் உயர் தரங்களைப் பேணுவதில் மேற்கொண்ட தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக கூறினார்.
***
AD/PD
(रिलीज़ आईडी: 2212062)
आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English