சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் சாரங் திருவிழா ஜனவரி 8 ஆம் தேதி தொடக்கம்
प्रविष्टि तिथि:
06 JAN 2026 5:54PM by PIB Chennai
7MO5.jpg)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்), ஆண்டு கலாச்சாரத் திருவிழாவான 52-வது சாரங் விழா கொண்டாட்டம் அக்கல்வி நிறுவன வளாகத்தில் 2026 ஜனவரி 8 தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சாரங் திருவிழா, மாணவர்களால் நடத்தப்படும் நாட்டின் மிகப்பெரிய கலாச்சார விழாக்களில் ஒன்றாகும். பல்வேறு புதிய முன்முயற்சிகள், புதுப்பிக்கப்பட்ட முதன்மை நிகழ்வுகள், விரிவுபடுத்தப்பட்ட சமூக தொடர்புத் திட்டங்களுடன் இந்த விழா நடைபெறுகிறது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், கலைஞர்கள், பார்வையாளர்களை ஒன்றிணைக்கும் போட்டிகள், பயிலரங்குகள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகளைக் கொண்ட துடிப்புமிக்க கலாச்சார விழாவாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் இன்று (ஜனவரி 6, 2026) இக்கல்வி நிறுவன வளாகத்தில் செய்தியாளர்களிடம் உரையாடிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி, "கலாச்சார விழாக்கள் இக்கல்வி நிறுவன வளாகத்திற்கு அதிக மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நமது நாட்டின் வளமான பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு தொடர்பு கொள்ள வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸின் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயண என். கும்மாடி பேசியபோது, “இந்த ஆண்டு தங்களுடைய கவனம் தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதாகும் என்று குறிப்பிட்டார். 52-வது சாரங்கின் வெற்றிக்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் வழிகாட்டிகளின் கடின உழைப்பு மற்றும் முயற்சியே காரணம் என்று அவர் தெரிவித்தார்.
சாரங் என்பது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் திறமை, போட்டி மற்றும் கலாச்சாத்தை ஒன்றிணைக்கும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட, மாணவர்களால் நடத்தப்படும் விழாவாகும்.
****
TV/IR/SH
(रिलीज़ आईडी: 2211947)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English