சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தோல் ஏற்றுமதி குழுமத்தின் தலைவராக திரு ரமேஷ் குமார் ஜுனேஜா பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
06 JAN 2026 5:23PM by PIB Chennai

தோல் ஏற்றுமதி குழுமத்தின் தலைவராக திரு ரமேஷ் குமார் ஜுனேஜா பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னையில் ஜனவரி 6 அன்று காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற தோல் ஏற்றுமதி குழுமத்தின் 184-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போது அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தொழில்முனைவோரான திரு ஜுனேஜா, தாம் நிறுவிய நிறுவனங்களில் சிறந்து விளங்கியதற்காகப் புகழ்பெற்றவர் ஆவார். அனைத்து முயற்சியிலும் வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
அவர் மேம்படுத்திய நிறுவனங்களான தோல் (ஜேசி குழுமம்), தோல் துணைப் பொருட்கள், இரசாயனங்கள் (இண்டோடான் கெமிக்கல்ஸ்), ரியல் எஸ்டேட் (ஜுனேஜா இன்ஃப்ராஸ்ட்ரக்சர்) போன்றவை பரந்து விரிந்துள்ளன.
அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தோல் தொழில்துறையில் மிகுந்த அனுபவமிக்கவராவார். 15 ஆண்டுகளுக்கு மேலாக தோல் ஏற்றுமதி குழுமத்தின் வாரிய உறுப்பினராகவும், 2014-ம் ஆண்டு முதல் கிழக்குப் பிராந்தியத்தின் மண்டல தலைவராகவும், 2024 ஏப்ரல் முதல் தோல் ஏற்றுமதி குழுமத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
***
AD/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2211806)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English