சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இந்திய அரசின் நாட்காட்டியான ‘பாரத் @ 2026’ தமிழ் பதிப்பை வெளியிட்டார்
2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை நாட்காட்டி பிரதிபலிக்கிறது: டாக்டர் எல். முருகன்
प्रविष्टि तिथि:
02 JAN 2026 7:46PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், மத்திய அரசின் நாட்காட்டியான ‘பாரத்@2026’ -ன் தமிழ் பதிப்பை சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், இந்த நாட்காட்டி இந்தியா @ 2047-ஐ நோக்கிய ஒரு செயல்திட்ட வழிகாட்டி என்றும், இது நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சிப் பாதையையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த நாட்காட்டியின் தமிழ் பதிப்பு வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார். இந்த நாட்காட்டி இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 மொழிகளில் வெளியிடப்பட்டு, பரந்த அளவில் மக்களைச் சென்றடைந்து, அனைவரையும் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் முக்கியத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக-பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் முன்னிலைப்படுத்தும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* ஜனவரி மாதம் தற்சார்பு இந்தியாவை மையமாகக் கொண்டு, தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை வலியுறுத்துகிறது.
* பிப்ரவரி மாதம் விவசாயிகளின் மேம்பாட்டை எடுத்துக்காட்டி, இந்தியாவை உலகின் உணவுக்கிண்ணமாகச் சித்தரிக்கிறது.
* மார்ச் மாதம் மகளிர் சக்தி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலைக் குறிக்கிறது. இதில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் அடங்கும்.
* ஏப்ரல் மாதம் வரிச் சலுகைகள், சட்டங்களை எளிதாக்குதல், தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வசதிகள் மூலம் நடுத்தரப் பிரிவினரின் மேம்பாட்டை வலியுறுத்துகிறது.
* மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியையும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நினைவுகூர்கிறது.
* ஜூன் மாதம் ஆயுஷ்மான் பாரத், மேம்படுத்தப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு, பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
* ஜூலை மாதம் பின்தங்கிய பிரிவினருக்கான சுகாதார வசதிகளைக் காட்சிப்படுத்துகிறது.
* ஆகஸ்ட் மாதம் இளைஞர் அதிகாரமளித்தலை எடுத்துக்காட்டி, தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் முக்கியப் பங்கை விளக்குகிறது.
* செப்டம்பர் மாதம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இதில் விரைவு சக்தி, தொழில்துறை வழித்தடங்கள், நான்கு மற்றும் ஆறு வழி நெடுஞ்சாலை திட்டங்கள், விரைவுச் சாலைகள், விமான நிலையங்களின் விரைவான விரிவாக்கம், வந்தே பாரத் ரயில், புதிய பாம்பன் ரயில் பாலம் மற்றும் 2027-ம் ஆண்டுக்குள் முன்மொழியப்பட்ட புல்லட் ரயில் திட்டம் போன்ற ரயில்வே மேம்பாடுகள் அடங்கும்.
* அக்டோபர் மாதம் இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் அதைப் பாதுகாக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
* நவம்பர் மாதம் தேசிய ஒற்றுமை, பழங்குடியினர் நலன், பிர்சா முண்டாவின் பாரம்பரியம் ஆகியவற்றை நினைவுகூர்கிறது.
* டிசம்பர் மாதம் வசுதைவ குடும்பகம் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் லட்சியங்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்நிகழ்ச்சியில், தெற்கு மண்டல தலைமை இயக்குநர் திரு. வி. பழனிச்சாமி, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் கூடுதல் தலைமை இயக்குநர் (உள்ளடக்க செயல்பாடுகள்) திருமதி எம். வாசுகி, மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர் திரு. ஜெ. காமராஜ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு. பி. அருண்குமார் உள்ளிட்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
VJ/SE
(रिलीज़ आईडी: 2210932)
आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English