சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மையத்தில் பிரதமரின் மக்கள் மருந்தகம் தொடக்கம்

प्रविष्टि तिथि: 01 JAN 2026 2:32PM by PIB Chennai

 

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் மையத்தில் பிரதமரின் மக்கள் மருந்தகம் இன்று (01.01.2026) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் மருந்தக மையத்தை ஆவடி  மத்திய ரிசர்வ் காவல் படையின் துணை காவல் கண்காணிப்பாளர் திரு ராஜீவ் ரஞ்சன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்தகைய மருந்தகங்கள் குடும்பங்களின் மருந்துகளுக்கான செலவுகளை வெகுவாகக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். இந்த மருந்தகத்தின் மூலம் உயர் தரத்திலான மருந்துகள் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மக்கள் மருந்தகம் சீருடை மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் குறைந்த செலவில் தரமான மருந்துகள் கிடைக்க முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் மக்கள் மருந்தகத்தின் தமிழ்நாடு பொறுப்பு அலுவலர் ஏ நாராயணா உடனிருந்தார்.

----

AD/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2210532) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English