சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக திரு ஸ்ரீகுமார் பிள்ளை பொறுப்பேற்றுக் கொண்டார்
प्रविष्टि तिथि:
01 JAN 2026 12:45PM by PIB Chennai
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு மறுசுழற்சி வாரியத்தின் சிறந்த விஞ்ஞானியும் துணை தலைமைச் செயல் அதிகாரியுமான திரு ஸ்ரீகுமார் ஜி பிள்ளை, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2025 டிசம்பர் 31 அன்று திரு சி ஜி கர்ஹட்கர் பணி ஓய்வு பெற்றதையடுத்து, 2026 ஜனவரி 1 முதல் ஸ்ரீகுமார் ஜி பிள்ளை தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இது இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுக்கு ஏற்ப, மேம்பட்ட அணு ஆராய்ச்சி மீதான இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கவனத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
திரு பிள்ளை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். இவர் 1990-ம் ஆண்டு மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்து, பல்வேறு பதவிகளில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார். இவரது பணி ட்ரோம்பேயில் உள்ள புளூட்டோனியம் ஆலையில் பணி சுழற்சி (ஷிப்ட்) பொறுப்பு பொறியாளராக தொடங்கியது. பின்னர் மூத்த செயல்முறைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு உயர்ந்தார்.
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி, கதிரியக்கக்கழிவு மேலாண்மை, எரிபொருள் சுழற்சியின் பின்நிலைச் செயல்பாடுகள், திட்டமேலாண்மை, கொள்முதல், பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்க நடைமுறைகள் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவரது துறை சார்ந்த நிபுணத்துவத்தில் எரிபொருள் சுழற்சி வசதிகளின் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாட்டு நடவடிக்கைகள், பராமரிப்பு ஆகியவையும் அடங்கும்.
சர்வதேச அணு எரிசக்தி முகமையின் பாதுகாப்புத் தேவைகளை உள்ளடக்கிய இரண்டாவது ஒருங்கிணைந்த மறுசுழற்சி ஆலையை வடிவமைப்பதற்காக பல்வேறு பொறியியல் குழுக்களை அவர் வழிநடத்தினார். மேலும் பாதுகாப்பு உத்தியின் மதிப்பாய்வு நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார். இவர் அணு மறுசுழற்சி வாரியத்தின் கொள்முதல், சேமிப்பு கிடங்கு பிரிவின் பிராந்திய இயக்குநராகவும் பணியாற்றியயுள்ளார். அதிக எண்ணிக்கையிலான வர்த்தகர்கள் பங்கேற்கும் வகையில் எரிசக்தித் துறை மற்றும் அரசு மின்னணுவியல் சந்தைக்கான கொள்முதல் கட்டமைப்புகளை நிறுவினார். இதன் மூலம் வர்த்தகர்களிடையே போட்டித்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தினார்.

அணு மறு சுழற்சி வாரியத்தின் துணைத் தலைமை செயல் அதிகாரியாக, பொறுப்பு வகித்த காலத்தில் இரண்டு உயர் மதிப்புள்ள எரிபொருள் சுழற்சியின் பின்னூட்ட செயல்பாடுகளின் திட்ட மேலாண்மையை கவனித்து வந்தார். செலவுகளுக்கான திட்ட ஒதுக்கீட்டுக்குள் பல்வேறு தரப்பினருடன் இணைந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
உயர்-கதிர்வீச்சு செயல்முறை அமைப்பை தூய்மைப்படுத்துதல், மறுசீரமைப்பு செய்தல், தோரியத்தைப் பயன்படுத்தி மின் எரிபொருள் மறுசுழற்சிக்கான வசதியை இயக்கும் அணுஉலை ஆகியவை அவரது முக்கிய பங்களிப்புகளாகும். ஒருங்கிணைந்த மறுசுழற்சி வசதிக்கான சர்வதேச அணு எரிசக்தி முகமையின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான மதிப்பாய்வு பணிகளையும் அவர் மேற்கொண்டார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பின்னூட்ட வசதிகளுக்கான திட்டமும் அவருடைய மேற்பார்வையில் நடந்தன. வடிவமைப்பு, மறுசுழற்சி ஆலைகளின் கட்டுமானம், நிறுவுதல் மற்றும் செயல்பாடு மூலம் இரண்டாம் கட்ட அணு மின் நிலையங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கான அரசின் நோக்கத்திற்கு ஏற்ப அவரது செயல்பாடுகள் இருந்தன. செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உயர் மதிப்பிலான திட்டங்களுக்கு வலுவான நிதி கண்காணிப்பு வழிமுறைகளை அவர் நிறுவினார்.
அவரது சிறப்பான சேவைகளுக்காக பெற்றுள்ள பல்வேறு குறிப்பிடத்தக்க விருதுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிறப்பு விருது (2010), ட்ரோம்பேயில் உள்ள புளூட்டோனியம் ஆலையின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான குழு சாதனை விருது (2012), மற்றும் அணுக்கரு இணைவு எரிபொருள் கூறுகளிலிருந்து எஸ்என்எம் பொருட்களை மீட்டெடுத்ததற்கான குழு சாதனை விருது (2017) ஆகியவையும் அடங்கும் .
**
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2210487)
आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English