சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய கல்விக் கொள்கை 2020 சிந்திக்கும் கல்வி முறைக்கு வித்திட்டுள்ளது- குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
29 DEC 2025 7:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம், மனப்பாடம் செய்யும் கல்வி முறையில் இருந்து, மாணவர்களே சிந்திக்கக்கூடிய கல்வி முறையை ஏற்படுத்தியுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பெடி செமினேர் சிபிஎஸ்சி பள்ளியின் புதிய கட்டிடத்தை அவர் இன்று திறந்துவைத்து பேசினார். அப்போது, புதிய மேல்நிலை பள்ளி கட்டிடத்தில் இடம்பெற்றுள்ள நவீன வகுப்பறைகள், மேம்பட்ட இயற்பியல், ரசாயனம், உயிரியல், கணிணி ஆய்வகங்கள் ஆகியவை மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
2047 ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது, அறிவு, ஒழுக்கம், சமூக பொறுப்பு ஆகியவற்றால் உருவாகும் என்று கூறினார்.
ஒரு ஏழைக் குழந்தைக்கு கல்வி அளிப்பது, அனைத்து தர்மங்களிலும் உயர்ந்தது என்று பாரதியார் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். அதுவே பள்ளியின் மிகப்பெரிய பணி என்று அவர் தெரிவித்தார். இத்தகைய கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ள பெடி செமினேர் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் தாம் பாராட்டுவதாக கூறினார்.
மாணவர்கள் நேர்மையுடன் போட்டியிட வேண்டும் என்றும், நாட்டில் பயனுள்ளவர்களாக திகழ வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
***
TV/IR/LDN/SE
(रिलीज़ आईडी: 2209562)
आगंतुक पटल : 13