சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வளர்ச்சி என்பது தொழில்நுட்பமானதோடு மட்டுமின்றி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்- குடியரசுத் துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
29 DEC 2025 7:29PM by PIB Chennai
புதுச்சேரியில் பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ், வீட்டு வசதி திட்டத்தை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் கீழ் 21 குடும்பங்களுக்கு வீட்டு சாவிகள் வழங்கப்படுவது அனைவரையும் உள்ளடக்கிய நகர வளர்ச்சியின் வெளிப்பாடாக தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
வீடு என்பது சுவர், கூரை மட்டுமன்றி அது குடும்பத்தின் மரியாதை, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் என்று குறிப்பிட்டார். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு அயராது செயல்படுவது போற்றுதலுக்குரியது என்று அவர் தெரிவித்தார்.
பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு திட்டத்தின் கீழ், 81 கோடி பயனாளிகளுக்கு மாதம்தோறும் உணவு தானியங்கள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் மூலம், 10 கோடி சிறு குறு விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி இந்தியா முன்னேறும்போது, வளர்ச்சி என்பது தொழில்நுட்பமானதோடு மட்டுமின்றி, அனைவரையும் இணைக்கும் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இப்பயணத்தில் புதுச்சேரி, தமது வெளிப்படையான மனப்பான்மை, உலகளாவிய பார்வை, தொழில்நுட்ப தயார்நிலை ஆகியவற்றின் மூலம் முக்கிய பங்காற்றும் என்று கூறினார்.
தாம் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் குடியரசு துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார். பாரதியாரின் உருவச்சிலையை திறந்து வைப்பதில் தாம் பெரும் மகிழச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதுச்சேரி வளர்ச்சிக்கு தொடர்ந்து துணை நிற்பதாக அவர் கூறினார். தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழ் மரபு ஆகியவற்றின் மீது அவர் கொண்டுள்ள மரியாதை நாடு முழுவதும் உணரப்படுவதாகவும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
***
TV/IR/LDN/SE
(रिलीज़ आईडी: 2209560)
आगंतुक पटल : 11