உள்துறை அமைச்சகம்
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு வலுவான சுகாதாரக் கட்டமைப்பை அமைப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது - திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
28 DEC 2025 5:47PM by PIB Chennai
குஜராத்தின் அகமதாபாத்தில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஏற்பாடு செய்திருந்த ஐஎம்ஏ நாக்டான் - 2025 (IMA NATCON 2025) என்ற தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று (28.12.2025) உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, நாட்டின் சுகாதாரத் துறையில் மக்களுக்கு சேவை செய்வதில் இந்திய மருத்துவ சங்கம் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் கூறினார். சுகாதாரத் துறை என்பது அடிப்படையில் ஒரு சேவைத் துறை என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறையின் நெறிமுறைகளை மறுவரையறை செய்து, அவற்றை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மாற்ற ஒரு குழுவை அமைக்குமாறு அவர் இந்திய மருத்துவ சங்கப் பிரதிநிதிகளை வலியுறுத்தினார்.
2047-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் இருக்கும் நிலை உருவாக வேண்டும் என்பதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த இலக்கை அடைய, மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ, அல்லது ஆற்றல், உற்சாகத்தின் அடிப்படையிலோ அனைத்து வகையிலும் ஆரோக்கியமான மக்களை உருவாக்குவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியில் மருத்துவர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதத்தில் வலுவான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், இதில் மருத்துவர்கள் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சில மாநிலங்களின் கூடுதல் திட்டங்கள் காரணமாக, நாட்டின் 70 சதவீத பகுதிகளில் ₹15 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் திரு அமித் ஷா கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ₹1.65 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2013–14 ஆம் ஆண்டில், மத்திய அரசின் சுகாதார பட்ஜெட் ₹37,000 கோடியாக மட்டுமே இருந்தது எனவும் ஆனால் இப்போது அது ₹1.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 100 ஆண்டுகளில் நோயாளிகளுக்கு சேவை செய்வதில் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் மருத்துவர்கள் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
கோவிட்-19 நெருக்கடியின் போது, நாட்டின் மருத்துவர்கள் மிகவும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் 27 மாநிலங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என்றும் இதில் இந்த, அமைப்பின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் மதிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். புதிய தலைவரின் பதவிக்காலத்தில், ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் பெறும் என்று திரு அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 2209229)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2209292)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English