அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
26 DEC 2025 3:17PM by PIB Chennai
இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். திருப்பதியில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளி, பாதுகாப்பு, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.
2014-ம் ஆண்டில் 400 புத்தொழில் நிறுவனங்களே இருந்தன என்றும் தற்போது அது இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இந்தியா 100 நாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மருந்துவத் துறையிலும் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாநாடு இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலுமிருந்து மூத்த விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208816®=3&lang=1
----
AD/PLM/KPG/SE
(रिलीज़ आईडी: 2208973)
आगंतुक पटल : 7