Special Service and Features
azadi ka amrit mahotsav

சன்சாத் கேல் மகோத்சவ் விளையாட்டுப் போட்டி நிறைவு விழா - மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் பங்கேற்க உள்ளார்

प्रविष्टि तिथि: 24 DEC 2025 6:24PM by PIB Chennai

மத்திய தகவல்ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் முன்னெடுப்பில், "சன்சாத் கேல் மகோத்சவ்-2025" எனப்படும்நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட விளையாட்டுப் போட்டிகள் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 21-ம் தேதி கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இறகுப்பந்து போட்டிகளுடன் இந்த விளையாட்டுத் திருவிழா தொடங்கியது. மேலும் டிசம்பர் 5-ஆம் தேதிகாரமடையில் கபடிவாலிபால்கோ-கோசிலம்பம் மற்றும் யோகா போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இறுதிக் கட்டமாகடர்ஃப் கிரிக்கெட் போட்டிகள் கடந்த வாரம் 12-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

சுமார் 3000 முதல் 3500 பேர் பதிவு செய்த இந்த விளையாட்டு திருவிழாவிறுவிறுப்பான போட்டிகளுடன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டுமிகச் சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகள்கேலோ இந்தியா அமைப்பின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பயிற்சி மேற்கொள்கின்ற வகையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாநாளை (25.12.2025)  அன்று காலை 9 மணியளவில்மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் அமைந்துள்ள எஸ்எஸ்விஎம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெறுகிறது.

இந்த நிறைவு விழாவில்காணொளிக் காட்சி வாயிலாக கலந்து கொள்ளும் பிரதமர் திரு நரேந்திர மோடிவிளையாட்டு வீரர்களுடன் நேரடியாக உரையாற்றுகிறார்.

மேலும்மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்முன்னாள் தடகள வீராங்கனையும் மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி. பி டி உஷாதிரைப்பட இசையமைப்பாளர் திரு ஜி வி பிரகாஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுவெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிக்கின்றனர்.

***

 

TV/AE/SE


(रिलीज़ आईडी: 2208203) आगंतुक पटल : 14