இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாகத்திற்கான சட்டப்பூர்வ ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்த உயர்நிலை ஆலோசனை கூட்டம்
प्रविष्टि तिथि:
22 DEC 2025 4:34PM by PIB Chennai
மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் இந்திய மென்பொருள் தயாரிப்பு அறக்கட்டளை, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து, பொறுப்புணர்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறைகளை வகுப்பது குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை டிசம்பர் 22-ம் தேதி நடத்தின.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வட்ட மேசை மாநாடு, மத்திய அரசின் முதன்மை அறிவியில் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளின் ஒழுங்குமுறை விதிகளை உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் அணுகுமுறை குறித்து, மத்திய அரசின் முதன்மை அறிவியில் ஆலோசனை அலுவலகத்தின் விஞ்ஞானி டாக்டர் பன்சால் எடுத்துரைத்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாக நடைமுறைகளுக்கான விதிமுறைகளை வகுப்பதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான செயல்திட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207416®=3&lang=1
***
SS/SV/LDN/SE
(रिलीज़ आईडी: 2207499)
आगंतुक पटल : 6