சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மதுரை மண்டலத்தின் சார்பில் குறைத்தீர்க்கும் முகாம்
प्रविष्टि तिथि:
22 DEC 2025 6:20PM by PIB Chennai
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) மதுரை மண்டலம் அதன் 6 மாவட்டங்களில் குறைதீர்க்கும் முகாமை ஒவ்வொரு மாதமும் நடத்துகிறது. அதன்படி இம்மாதம் 2025, டிசம்பர் 29 காலை 9.00 மணி முதல் நடத்தவுள்ளது.
இதுகுறித்து மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் திரு. அமியா காந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள். சந்தாதாரர்கள்,ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள். வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விவகாரங்களுக்கு மற்றும் இ.எஸ்.ஐ.சி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள். சந்தாதாரர்கள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களுக்கான குறைகளை தீர்க்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfUkLmE1hdMOG6Ecb-Yzo6z5vGFNK1RB7F5sS1yziuUmBi2AA/viewform?pli=1 என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்ங்கள் மதுரையில் தன் அறக்கட்டளை, சிவகங்கையில் எம்.எம்.ஃபோர்கிங்ஸ் நிறுவனம், ராமநாதபுரத்தில் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனியில் ஆர் ஆர் சர்வதேச பள்ளி, விருதுநகரில் கலைமகள் வித்யாலயா பள்ளி, திண்டுக்கல்லில் காந்தி கிராமத்தில் காந்திகிராம அறக்கட்டளையின் மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளன.
***
SS/IR/RK/SE
(रिलीज़ आईडी: 2207490)
आगंतुक पटल : 16