சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

காசியில் இருந்து 300 மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர் - ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஆளுநர் திரு ஆர். என். ரவியுடன் மாணவர்கள் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 DEC 2025 2:43PM by PIB Chennai

காசி தமிழ் சங்கமத்தின் 4-ம் ஆண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, காசியில் இருந்து சுமார் 300 மாணவர்கள் சென்னைக்கு வந்தடைந்தனர். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த மாணவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை ஐஐடி-ன் பேராசிரியர்கள், அதிகாரிகள், பிரதிநிதிகள் அந்த மாணவர் குழுவை வரவேற்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி மாணவர்களுடன் கலந்துரையாடினா்.காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான ஆழமான கலாச்சாரப் பிணைப்புகள் குறித்து அவர் பேசினார். இதுபோன்ற கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களின் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

காசியில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தென்னிந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த கல்வி, கலாச்சாரப் பயணத்தின் போது, மாணவர்கள் தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம், மரபுகள், கல்வி முறை குறித்து ஆழமாக அறிந்து கொள்வார்கள். மேலும், தென்னிந்தியா முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோயில்கள், வரலாற்றுத் தலங்கள், கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் பெறுவார்கள்.

300 மாணவர்கள், 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இங்கு தங்கும் 10 நாட்களில், அவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வார்கள். பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற பின்னர், ராமேஸ்வரத்தில் நிகழ்வு நிறைவடையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207167&reg=3&lang=1

***

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2207241) வருகையாளர் எண்ணிக்கை : 92
இந்த வெளியீட்டை படிக்க: English