சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையத்தில் தீ விபத்து - தொலைபேசி சேவைகளை சீரமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
20 DEC 2025 7:18PM by PIB Chennai
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையக் கட்டடத்தில் 20 டிசம்பர் 2025 அன்று காலை 9:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தொலைபேசி சேவைகளை மீட்டெடுக்கும் பணிகளை மேற்பார்வையிட, சென்னை தொலைபேசி துறையின் மூத்த அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக, சென்னை, தமிழ்நாட்டின் பிற பகுதிகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மொபைல் குரல் அழைப்பு சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும், பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகள் மற்றும் அவசர சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
தீயை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு உடனடியாக, அவசர சேவைகள் மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகள் சீரமைக்கப்பட்டன.
மேலும், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் குரல் அழைப்பு மற்றும் தரவுச் சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. சென்னையில், தொலைத்தொடர்பு சேவைகள் பகுதியளவில் சீராக்கப்பட்டன. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207035®=3&lang=1
***
AD/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2207054)
வருகையாளர் எண்ணிக்கை : 78