சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நகை வியாபாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) செங்கல்பட்டில் நடத்தியது

प्रविष्टि तिथि: 19 DEC 2025 1:16PM by PIB Chennai

ஹால் மார்க் குறித்து நகை வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனத்தின்  (பிஐஎஸ்) சென்னைக் கிளை 18.12.2025 அன்று செங்கல்பட்டில் நடத்தியதுபிஐஎஸ் ஹால் மார்க்கிங் தரநிலைகள், ஒழுங்குமுறை விதிகள், தடையற்ற இணக்கத்திற்காக பிஐஎஸ் வழங்கும் டிஜிட்டல் சேவைகள் குறித்து நகை வியாபாரிகளின் புரிதலை அதிகரிப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த  நகை வியாபாரிகள், உள்ளூர் நகை வியாபாரிகள் சங்கங்களின்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிஐஎஸ் சென்னைக் கிளை  அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு எஸ் டி தயானந்த், நகை வியாபாரிகள் தரநிலையையும் தூய்மையையும் பின்பற்றுவதன் மூலம் நகை வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என்றார். ஹால் மார்க்கிங் திட்டம் தொழில்துறைக்கும் நுகர்வோருக்கும் பயனளிப்பதாக அவர் தெரிவித்தார்.

பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத்தின் இயக்குநர் திரு டி ஜீவானந்தம் பேசுகையில், நகை வியாபாரிகளின்  ஒழுங்குமுறைப் பொறுப்புகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான இந்திய தரநிலைகளின் அடிப்படைத் தேவைகள் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஆகியவற்றை விவரித்தார். நுகர்வோர் புகார்களுக்குத் தீர்வு காண்பது, உரிமச் சான்றிதழ் சரிபார்ப்பது, பொருட்களின் உண்மைத் தன்மையை அறிவது போன்றவற்றுக்கு பிஐஎஸ் கேர் செயலியைப் பயன்படுத்துமாறு பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

***

SS/SMB/KPG/EA

 


(रिलीज़ आईडी: 2206661) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English