சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆப்கானிஸ்தானுக்கு வலிமையான மருத்துவ மற்றும் மனிதாபிமான ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது

प्रविष्टि तिथि: 18 DEC 2025 9:46PM by PIB Chennai

ஆப்கானிஸ்தானின் பொது சுகாதார அமைச்சர் திரு மவ்லவி நூர் ஜலால் ஜலாலியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அந்நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் மனிதாபிமானத் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் தற்போதைய சுகாதார ஒத்துழைப்பை ஆய்வு செய்ததுடன், சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவ பொருட்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். மக்களை மையமாகக் கொண்ட  இந்தியாவின் நீண்டகால அணுகுமுறையால் வழிநடத்தப்பட்டுஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் செயல்பாடுகள், நலன், திறன் மேம்பாடு மற்றும் முக்கியமான சுகாதார சேவைகளை அணுகுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் வலியுறுத்தி வருகிறார் என்று திரு நாட்டா குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் உதவி, மனிதாபிமான பரிசீலனைகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீண்டகால பிணைப்புகளால் வழிநடத்தப்படுகிறது என்று திரு நட்டா மேலும் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா 327 டன் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது என்று திரு ஜே.பி. நட்டா குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சகத்தின் வேண்டுகோளின்படி, புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஒரு சி.டி. ஸ்கேன் இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் அவை அந்நாட்டைச் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார். கதிரியக்க சிகிச்சை இயந்திரம் மற்றும் கூடுதல் மருத்துவப் பொருட்கள் தொடர்பான ஆப்கானிஸ்தானின் முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டத்தில், திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டு  மருத்துவர்களுக்கு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து, பயிற்சி அளிக்க மூத்த இந்திய மருத்துவர்கள் குழுவை அங்கு அனுப்புவதற்கான வழிமுறைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. ஜூன் 2025-ல் காபூலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெய்ப்பூர் பாத முகாமில் 75 செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வரும் ஆண்டில் இதுபோன்ற முகாம்களை அதிகரிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அவசரநிலை மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நோயாளிகளுக்கு, இந்தியாவில் இலவச சிகிச்சை வழங்குவதற்கும், மருத்துவ விசாக்களை எளிதாக்குவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. ஏப்ரல் 2025-ல் புதிய ஆப்கானிய விசா தொகுதி தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த நான்கு மாதங்களில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ விசாக்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

***

AD/BR/SE


(रिलीज़ आईडी: 2206299) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English