சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கான முக்கிய மைல்கல்லாக, இந்திய–ஓமன் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை எஃப்ஐஇஓ வரவேற்கிறது
प्रविष्टि तिथि:
18 DEC 2025 7:51PM by PIB Chennai
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ), இந்திய–ஓமன் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) கையெழுத்தாகியிருப்பதை வரவேற்றுள்ளது. வளைகுடா பிராந்தியத்துடன் இந்தியாவின் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தத்தைக் கூட்டமைப்பு கருதுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த எஃப்ஐஇஓ தலைவர் திரு எஸ்.சி. ரல்ஹான், இந்திய–ஓமன் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம், சரக்கு மற்றும் சேவைகள் துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறனை வலுப்படுத்தும் என்றும், தொழில்முறை பணியாளர் இயக்கத்தை வலுப்படுத்துவதுடன், உள்ளடக்கிய மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சியை ஆதரிக்கும் என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஏற்றுமதிகளுக்கு இதுவரை இல்லாத அளவிலான சந்தை அணுகல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், வேலைவாய்ப்பை உருவாக்கி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கைவினைஞர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களை வலுவாக ஆதரிக்கும் என்றும் திரு ரல்ஹான் கூறினார்.
ஓமன் நாட்டின் உத்திசார் நிலைப்பாடு, அதனை வளைகுடா மற்றும் ஆப்ரிக்காவுக்கான முக்கிய நுழைவாயிலாக மாற்றுகிறது. இந்த ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதியாளர்கள் பிராந்திய மதிப்புச் சங்கிலிகளில் மேலும் திறம்பட இணைவதற்கும், சந்தைகளை பல்வேறு திசைகளில் விரிவுபடுத்துவதற்கும், இந்தியாவின் ஏற்றுமதி தடத்தை பெரிதும் உயர்த்துவதற்கும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
AD/BR/SE
(रिलीज़ आईडी: 2206292)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English