கூட்டுறவு அமைச்சகம்
பால்வளம், மீன்வளம் மற்றும் வேளாண் கூட்டுறவு சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 1:05PM by PIB Chennai
தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கூறு பி, 9 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 1568.28 கோடி ஆகும். இதில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ வளர்ச்சி உதவி கடனாக ரூ. 924.56 கோடி, மத்திய அரசின் மானிய உதவியாக ரூ. 475.54 கோடி, மாநில/பங்கேற்கும் நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ. 168.18 கோடி ஆகியவை அடங்கும்.
வெண்மைப் புரட்சி 2.0, 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் 75,000 புதிய பல்நோக்கு பால் கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதையும், தற்போதுள்ள 46,000 பால் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐந்தாவது ஆண்டின் இறுதிக்குள், பால் கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 1000 லட்சம் கிலோவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களை உள்ளடக்கும் நோக்கில், புதிய பல்நோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் /பால்வள /மீன்வள கூட்டுறவு சங்கங்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியை நபார்டு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுகள் ஆதரிக்கின்றன. தேசிய கூட்டுறவு தரவுத் தளத்தின்படி, மொத்தம் 30,083 புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால்வள மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 15.11.2025 நிலவரப்படி நாடு முழுவதும் 15,793 பால்வள மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205064®=3&lang=1
***
SS/SMB/SE
(रिलीज़ आईडी: 2205490)
आगंतुक पटल : 6