மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் மீன் உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் 195 லட்சம் டன்னாக அதிகரித்தது – மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 17 DEC 2025 11:29AM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளர்ப்பு மேம்பாட்டுத்துறை நாட்டின் மீன்வளர்ப்பு மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2015-16-ம் ஆண்டு முதல் நீலப்புரட்சி, மீன்வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகள் மற்றும் சிறந்த கொள்கைகள் காரணமாக ஆண்டு மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2013-14-ம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன் அளவிற்கு இருந்த மீன் உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் 195 லட்சம் டன்னாக 103 சதவீதம் அதிகரித்துள்ளது. கடல் உணவு ஏற்றுமதியும் இரட்டிப்பாகியுள்ளது. 2014-15-ம் ஆண்டில் ரூ.30,213 கோடி அளவிற்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2024-25-ம் ஆண்டில் ரூ.62,408 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 107 சதவீதம் அதிகரிப்பாகும்.

இத்தகவலை மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205010&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2205073) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR