PIB Headquarters
இமயமலை மாநிலங்களில் கழிவு மேலாண்மை புதுமைகள்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 10:45AM by PIB Chennai
கம்பீரமான இமயமலை பகுதிகளில், துப்புரவுப் பணியாளர்கள் வீட்டுக் கழிவுகளைச் சேகரிக்க குறுகிய பாதைகளில் செல்கின்றனர். பள்ளி வளாகங்களில், மாணவர்கள் வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக கழிவுகளைப் பிரிக்கின்றனர். அதே நேரத்தில் புனித யாத்திரைத் தலங்களில், பார்வையாளர்கள் நியமிக்கப்பட்ட சேகரிப்பு பெட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த அன்றாட நடவடிக்கைகள் இமயமலைப் பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட கழிவு மேலாண்மைக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன, இது உயரமான குடியிருப்புகள், கடினமான நிலப்பரப்பு, பருவநிலை மாறுபாடு மற்றும் வரையறுக்கப்பட்ட நிலம் கிடைக்கும் தன்மை ஆகியவற்றால் மேலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பருவகால சுற்றுலா மற்றும் புனித யாத்திரை நடவடிக்கைகள் இந்த செயல்பாட்டு கோரிக்கைகளை அதிகரிக்கின்றன. இதற்க உள்ளூர் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த நிலைமைகளை அங்கீகரித்து, அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசுகள் தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் 2.0 -ன் கீழ் கழிவு மேலாண்மை முயற்சிகளை வலுப்படுத்தியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204421®=3&lang=1
***
SS/PKV /SH
(रिलीज़ आईडी: 2205059)
आगंतुक पटल : 7