சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி ஜிப்மரில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
16 DEC 2025 9:44PM by PIB Chennai

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஜிப்மர் ஊழியர்களுக்கான லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமை இன்று நடத்தியது. இது ஜிப்மரின் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்டது. இந்த ஒருநாள் பயிற்சி நிகழ்வு ஜிப்மர் திறன் மேம்பாட்டு பிரிவு பொறுப்பு அதிகாரி டாக்டர் ரவிக்குமார் சிட்டோரியா, ஜிப்மர் இணை இயக்குநர் திரு ரங்கபாஷியம் ஆகியோரின் மேற்பார்வையில் நடந்தது.
புதுச்சேரி அரசின் கணக்குகள் மற்றும் கருவூலங்களின் முன்னாள் இயக்குநர் திரு அமிர்தலிங்கம் ஜிப்மர் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது உரையாற்றிய அவர், பொது நிர்வாகத்தில் ஊழல் தடுப்பு. நெறிமுறையான நிர்வாகம், நிதி ஒழுங்குமுறை, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பு கூறல் உள்ளிட்ட மிகமுக்கியமான அம்சங்களை குறித்து விரிவாக உரையாற்றினார். மேலும் இந்தப் பயிற்சி முகாமில் முறைகேடுகளை தடுக்கும் நுட்பமான மற்றும் திறன்மிக்க வழிமுறைகளையும் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஊழியர்களுக்கு விளக்கப்பட்டது.
ஜிப்மர் தமது ஊழியர்களின் திறன் மற்றும் அறிவு சார்ந்த பல்வேறு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பயிற்சி திட்டங்களை நடத்தி வருகிறது. இன்றைய நிகழ்வு ஜிப்மரின் நிர்வாக நெறிமுறைத் தரங்களை மேம்படுத்துவதோடு வலுவான திறன் கட்டமைப்பையும் முன்னிறுத்தி நடைபெற்றது.
ஜிப்மரின் தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி டாக்டர் நந்தகிஷோர் மற்றும் ஜிப்மரின் மூத்த நிர்வாக அதிகாரி திரு. ஹவாசிங் ஆகியோர் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர்.
***
AD/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2204916)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English