பாதுகாப்பு அமைச்சகம்
மாலத்தீவில் கடற்படையின் 'ஏகதா-2025' பயிற்சி நிறைவு விழா
प्रविष्टि तिथि:
15 DEC 2025 8:10PM by PIB Chennai
இந்தியக் கடற்படைத் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் தருண் சோப்தி, 'ஏகதா-2025' கூட்டுப் பயிற்சியின் நிறைவு விழாவில் பங்கேற்க 2025 டிசம்பர் 15 முதல் 17 வரை மாலத்தீவுக்கு அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா மற்றும் மாலத்தீவு தேசியப் பாதுகாப்புப் படைக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு கடல்சார் பயிற்சியான 'ஏகதா', 2017-ல் தொடங்கப்பட்டது. இதன் 8-வது பதிப்பில் நீர்மூழ்கிக் கருவிப் பயிற்சி, துப்பாக்கிச் சூடு, வெடிபொருள் கையாளுதல் போன்ற செயல்பாடுகள் மூலம் கூட்டுச் செயல் திறன் மேம்படுத்தப்பட்டது.
மாலேயில், அட்மிரல் சோப்தி, அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி இப்ராஹிம் ஹில்மியைச் சந்தித்து, பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒத்துழைப்பு குறித்துப் பேசினார். அத்துடன், ஐஎன்எஸ் சார்தா கப்பலில் வைத்து மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் ‘ஹுராவீ’ கப்பலுக்கான உதிரிப் பாகங்களையும் அவர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204321®=3&lang=1
(வெளியீட்டுஅடையாள எண் : 2204321)
****
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2204375)
आगंतुक पटल : 55