ஜல்சக்தி அமைச்சகம்
நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறித்து மத்திய மாநில அரசுகளின் வருடாந்திர மதிப்பீடு
प्रविष्टि तिथि:
15 DEC 2025 4:05PM by PIB Chennai
நாட்டில் மாறிவரும் நிலத்தடி நீர் ஆதாரங்களின் நிலை குறித்து மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து வருகிறது.
இதுகுறித்து 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்தம் வருடாந்திர நிலத்தடி நீர் ஆதாரம் 448.52 பில்லியன் கனமீட்டராக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஒரு ஆண்டிற்கான நிலத்தடி நீர் பயன்பாடு குறித்த மதிப்பீடு 407.75 பில்லியன் கனமீட்டராக இருந்தது.
மேலும் நாடு முழுவதும் நிலத்தடி நீர் பயன்பாடு குறித்த வருடாந்திர மதிப்பீடுகளின்படி, 2025-ம் ஆண்டில் மொத்தம் 247.22 பில்லியன் கனமீட்டராக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பாசனம், தொழில்துறை மற்றும் வீட்டு உபயோகங்கள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஓராண்டிற்கான நிலத்தடி நீரின் அளவு 60.63 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.
தேசிய நீர்வள வரைபட மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,30,058 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2023 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், 1,05,829 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜ்பூஷன் சௌத்ரி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204095®=3&lang=1
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2204306)
आगंतुक पटल : 10