ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாருவதற்கான தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2025 4:03PM by PIB Chennai

ஆறுகள் மற்றும் ஏரிகள் உட்பட வாய்க்கால்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை தூர்வாருவதற்கான விரிவான மற்றும் முழுமையான மேலாண்மைக் கொள்கையை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு திட்டத்தின் கீழ், நீர்வள ஆதாரத் துறை தேசிய அளவிலான வண்டல் மண் தூர்வாரும் மேலாண்மை குறித்த வழிவகைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த மேலாண்மை சார்ந்த கொள்கைகளில், வண்டல் மண் உருவாக்கத்தை முற்றிலும் நீக்காமல், அதன் படிமானத்தை குறைப்பது குறித்த வழிவகைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில், பஞ்சாப் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நதிநீர் படுகைகளில் வண்டல் மண்ணை தூர்வாருவதற்கான நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204092&reg=3&lang=1

***

SS/SV/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2204301) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी