கலாசாரத்துறை அமைச்சகம்
நாட்டின் நூலகங்களின் மேம்பாட்டிற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது- மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
15 DEC 2025 4:13PM by PIB Chennai
நாட்டில் 46,746 பொது நூலகங்கள் உள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
இது குறித்து மக்களவையில் இன்று எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், தேசிய நூலகங்கள் இயக்கத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு மாநில மத்திய நூலகம் மற்றும் ஒரு மாவட்ட நூலகத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், 2016-17-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலகத்திற்கு 70 லட்சம் ரூபாயும் வேலூர் மாவட்ட நூலகத்திற்கு 87 லட்சம் ரூபாயும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204106®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2204274)
आगंतुक पटल : 29