சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை என்ஐடிடிடிஆர் நிறுவனத்தில் 62-வது நிறுவன தின கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
14 DEC 2025 4:58PM by PIB Chennai
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ், தனித்துவமான வகைப்பாட்டில் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சென்னை என்ஐடிடிடிஆர், தனது 62-வது நிறுவன தினத்தை இன்று (2025 டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடியது.

இதில் தார்வார்ட் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) இயக்குநர், பேராசிரியர் டாக்டர் வெங்கப்பய்யா ஆர். தேசாய், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சென்னை என்ஐடிடிடிஆர் இயக்குநர், பேராசிரியர் டாக்டர் உஷா நடேசன், நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. பேராசிரியர் டாக்டர் வி. வந்தனா தேவி, வரவேற்புரையும் நிகழ்ச்சி விளக்க உரையும் ஆற்றினார்.
தலைமை உரையாற்றிய, சென்னை என்ஐடிடிடிஆர் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் உஷா நடேசன், இந்த நிறுவனம் அடைந்துள்ள முக்கிய சாதனைகளை எடுத்துரைத்தார். நிறுவனத்தின் சர்வதேச அளவிலான நடைமுறைகள், புதுமையான பயிற்சி திட்டங்கள், கல்விசார் முயற்சிகள் போன்றவை குறித்து அவர் விளக்கினார்.

தலைமை விருந்தினர் பேராசிரியர் டாக்டர் வெங்கப்பய்யா ஆர். தேசாய் தமது உரையில், உயர் கல்வி நிறுவனங்களில் தொலைநோக்கு பார்வை, நீண்டகால திட்டங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தினார். சென்னை என்ஐடிடிடிஆர், நாட்டின் தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்துவதில் ஆற்றியுள்ள முக்கிய பங்கினை அவர் பாராட்டினார். விழாவின் ஒரு பகுதியாக, 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203756)
आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English