சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் - காற்றுத் தர மேலாண்மை ஆணையம் நடத்தியது

प्रविष्टि तिथि: 13 DEC 2025 3:01PM by PIB Chennai

காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் நேற்று (12.12.2025) புதுதில்லியில் நடைபெற்றது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (ஜிஆர்ஏபி) கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் செயல்திறனையும் இக்கூட்டம் ஆய்வு செய்ததுகுறிப்பாக தில்லியில் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த 23-வது துணைக் குழுக்கூட்டத்தில், தில்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் வரும், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுகூட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது.

தேசிய தலைநகரப் பகுதிக்குள் வரும் அனைத்து மாநிலங்களும் அந்தந்த பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான பயனுள்ள கண்காணிப்பு, பகுப்பாய்வு நடைமுறைகளைப் பின்பற்றி சிறந்த தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆணையம் வலியுறுத்தியது.

குளிர் காலத்தின் காற்று மாசுபாட்டை திறம்பட சமாளிக்க முக்கிய பகுதிகளிலும் பிற முன்னுரிமை பகுதிகளிலும் உள்ள அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது. மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், காற்றின் தரத்தில்  முன்னேற்றங்களை அடைவதற்கும் ஒரு கூட்டு அணுகுமுறை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203459&reg=3&lang=1

***

Release ID: 2203459

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203544) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी