உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
பிரதமரின் நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம்
प्रविष्टि तिथि:
05 DEC 2025 4:43PM by PIB Chennai
நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், அக்டோபர் 31, 2025 வரை, கடன் இணைக்கப்பட்ட மானியத்திற்காக 1,62,744 கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 3,65,935 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விதை மூலதனம் அங்கீகரிக்கப்பட்டது
பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 101 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 76 தொழில் காப்பக மையங்கள் அங்கீகரிக்கப்பட்டன. பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் கூறுகளின் கீழ் 27 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
உணவு பதப்படுத்தும் துறையின் ஒழுங்கமைக்கப்படாத பிரிவில் உள்ள நுண் நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், துறையின் முறைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கும், நுண் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199453®=3&lang=1
---
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2203333)
आगंतुक पटल : 6