PIB Headquarters
குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டங்கள்
प्रविष्टि तिथि:
05 DEC 2025 2:45PM by PIB Chennai
விரைவான ஒப்புதல் நடைமுறைகள், டிஜிட்டல் செயல்முறைகள், குறைக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின் சுமை போன்றவற்றால் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை எளிதாக்குகின்றன.
சிறந்த ஊதிய நடைமுறைகள், சமூகப் பாதுகாப்பு போன்றவற்றால் இச்சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும் கண்ணியத்தையும் வழங்குகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்துறை உள்ளது. இது நாட்டின் உற்பத்தியில் 35.4 சதவீதத்தையும், ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 45.73 சதவீதத்தையும் கொண்டுள்ளது . இந்தத் துறை 6.5 கோடி நிறுவனங்கள் மூலம் கிட்டத்தட்ட 28 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இந்நிறுவனங்களின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க தொடர்ச்சியான கொள்கை ஆதரவு அவசியமாக உள்ளது. இந்தத் துறையை வலுப்படுத்த, புதிய தொழிலாளர் சட்டங்கள் பயன்படும். வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பணியிடப் பாதுகாப்பு போன்றவை தொழிலாளர் சூழல் அமைப்பை நவீனமயமாக்க முயல்கின்றன.
இதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சில முக்கிய அம்சங்கள்:
* தொழிற்சாலை உரிமம் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் அல்லது விரிவாக்கத்திற்கான அனுமதியை வழங்குவதற்கு 30 நாள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஒட்டுமொத்த ஒப்புதல் காலக்கெடு 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான நன்மைகள்:
* அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக வழங்கக்கூடாது.
* பணியாளரின் திறமை, வேலையின் கடினத்தன்மையைக் கருத்தில் கொண்டு, மணிநேர, தினசரி அல்லது மாதாந்திர ஊதிய காலங்களின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
* உணவு, உடை உள்ளிட்ட குறைந்தபட்ச வாழ்க்கைத் தரங்களைக் கருத்தில் கொண்டு, அடிப்படை ஊதியம் அரசால் நிர்ணயிக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.
* வேலை நேரத்திற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வேலைக்கும் சாதாரண ஊதிய விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு நன்மைகள் இந்தச் சட்டத்தில் உள்ளன.
இந்த சட்டங்கள் ஒரு சமநிலையான சூழலை உருவாக்குகின்றன. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம், கண்ணியம், பாதுகாப்பு ஆகியவை கிடைத்து அவர்கள் பயனடைவார்கள். இது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை எட்டுவதை உறுதி செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199330®=3&lang=1
(Release ID: 2199330)
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2203300)
आगंतुक पटल : 16