சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் சென்னை தலைமை தபால் நிலையத்தில் 20.12.2025 அன்று நடைபெறவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
12 DEC 2025 5:38PM by PIB Chennai
சென்னை தலைமை தபால் நிலைய கட்டட வளாகத்தில் அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் வரும் 20-12-2025 அன்று காலை 11:30 மணியளவில் நடைபெற உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை 18.12.2025 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பலாம்.
அஞ்சல் சேவைகள் தொடர்பான புகாரில், புகார் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள் / குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை திருமதி. ச.ஸ்வாதி மதுரிமா, முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அலுவலகம், சென்னை - 600 001 என்ற முகவரிக்கு 18.12.2025 தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பிவைக்க கோரப்படுகிறது.
அஞ்சல் உறையின் முன்பக்க மேல் பகுதியில் அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் - சென்னை ஜி.பி.ஓ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பு: குறை தீர்ப்பு முகாமில் தாங்கள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ உங்கள் வசதிக்கேற்ப பங்கேற்கலாம். எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்பவும்.
***
SS/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2203266)
வருகையாளர் எண்ணிக்கை : 70