மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பான, நம்பகமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் மாநாட்டை ஐஐடி மெட்ராஸ் நடத்தியது

प्रविष्टि तिथि: 11 DEC 2025 5:40PM by PIB Chennai

உலக அளவில் பாதுகாப்பான நம்பகத்தன்மையுடன் கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் செயற்கை நுண்ணறிவுக்கான மையம் மேற்கொண்டு வருகிறது. சமூகத்தில் உள்ள மக்களுக்கு புதுமை கண்டுபிடிப்புகள் மீதான நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த மையம் மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில், பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை இம்மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் இந்த மையம் நடத்தியது. இந்த மாநாட்டில் வளரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வாக நடைமுறைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அரசு, தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூத்தத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டை ஐஐடி மெட்ராஸ்  கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில்  மாநில தொழில்துறை அமைச்சர் திரு டி ஆர் பி ராஜா இம்மாதம் 10-ம் தேதி தொடங்கி வைத்தார்.

 

***

SS/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2203110) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English