சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் சென்னை எழும்பூரில் 18.12.2025 அன்று நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2025 6:46PM by PIB Chennai
சென்னை எழும்பூரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், எண் 5, பழைய எண் 3 நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, சென்னை வடக்கோட்ட அலுவலகம், சென்னை 600 008 என்ற முகவரியில் 18.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் கீழ்க்கண்ட விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும்.
புகார்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 17.12.2025 ஆகும். புகார்களை சாதாரண தபாலிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அல்லது dochennainorth@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். புகார்கள் அடங்கிய உறையின் மேற்பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு- சென்னை வடக்கோட்டப் பிரிவு என குறிப்பிடப்பட வேண்டும்.
****
AD/IR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2202674)
வருகையாளர் எண்ணிக்கை : 81