புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை சேவைகள்: நவீனமயமாக்கல் மற்றும் துல்லியமாக தகவல் வழங்க ஏற்பாடுகள்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 4:55PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வுத் துறை, மோசமான வானிலை நிகழ்வுகளைச் சிறப்பாகக் கையாள, புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளது. 'மிஷன் மௌசம்' திட்டத்தின் கீழ் 47 டாப்ளர் வானிலை ராடார்கள் இப்போது செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் நாட்டின் 87% பகுதி ராடார் பார்வையின் கீழ் வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 'பாரத் முன்னறிவிப்பு அமைப்பு', 6 கி.மீ. உயர் தெளிவுத்திறனில் பஞ்சாயத்து அளவில் கூட துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், தீவிர வானிலை நிகழ்வுகளைக் கணிக்கும் திறன் 30 முதல் 40 விழுக்காடு வரை மேம்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை மொபைல் செயலிகள் ('மௌசம்', 'மேக் தூத்', 'தாமினி') மற்றும் பொது எச்சரிக்கை நெறிமுறை மூலம், மாவட்ட மற்றும் நகர அளவிலான பாதிப்பு அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கைகளை மக்களுக்குத் திறம்படப் பரப்புகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202389®=3&lang=1
(செய்தி வெளியீட்டு அடையாள எண் : 2202389)
****
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2202646)
आगंतुक पटल : 16