பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 4:55PM by PIB Chennai
நாட்டில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக, பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
* பழங்குடியின மாணவர்களுக்கான பத்தாம் வகுப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 25 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இதன் மூலம் 24913 மாணவர்கள் பயனடைந்தனர்.
* குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான பிரதமரின் பெருந்திட்டமான பிரதமரின் ஜன் மன் திட்டதில் தமிழ்நாட்டில் பல்நோக்கு மையங்களை அமைக்க கடந்த நிதி ஆண்டில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
* தேசிய பழங்குடியினர் நிதி மேம்பாட்டுக் கழகமான என்எஃப்டிஎஃப்டிசி சார்பில் தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில், 6437 பயனாளிகளுக்கு சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டன.
மக்களவையில் இன்று (11.12.2025) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202394®=3&lang=1
(Release ID: 2202394)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2202598)
आगंतुक पटल : 19