கலாசாரத்துறை அமைச்சகம்
பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கு உதவித்தொகை
प्रविष्टि तिथि:
11 DEC 2025 3:43PM by PIB Chennai
இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021 முதல் 2025 அக்டோபர் வரை மொத்தம் 4956 இளம் கலைஞர்கள் உதவித்தொகை பெற்றனர். 2025-26 நிதியாண்டில் (30.10.2025 வரை) பல்வேறு கலாச்சாரத் துறைகளைச் சேர்ந்த 1079 இளம் கலைஞர்களுக்கு ரூ.3.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பேர் ரூ. 6.90 லட்சம் பெற்றுள்ளனர்.
கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்ற பின், அவை மதிப்பீடு/பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின் உரையாடல்/நேர்காணல் நடத்தப்படும். பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் நிபுணர் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகைக்கான நிதி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 4 தவணைகளில் விடுவிக்கப்படும். இருப்பினும், முதல் தவணைக்குப் பின் விடுவிப்பது கலைஞர்களிடமிருந்து ஆறு மாத அறிக்கைகளை சரியான நேரத்தில் பெறுவதைப் பொறுத்தது.
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202278®=3&lang=1
****
AD/SMB/SH
(रिलीज़ आईडी: 2202571)
आगंतुक पटल : 14