அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பயோஃபார்மாசூட்டிகல் துறையில் உள்நாட்டு உற்பத்தி
प्रविष्टि तिथि:
10 DEC 2025 4:34PM by PIB Chennai
பயோஃபார்மாசூட்டிகல் துறையில் தொழில்முனைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உயிரி தொழில்நுட்பத் துறை, 2012-ல், லாப நோக்கமற்ற பொதுத்துறை நிறுவனமான உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலை அமைத்தது. இது புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும், மருந்து மற்றும் உயிரி மருந்துகளை உள்ளடக்கிய சுகாதாரத் துறையில் கவனம் செலுத்தி தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் ஓர் ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயல்படுகிறது.
உயிரி தொழில்நுட்பத் துறை , "இந்தியாவில் உயிரி தொழில்நுட்பத் தொழில்முனைவோரை மேம்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துதல்" என்ற தலைப்பில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்டமான தேசிய பயோஃபார்மாசூட்டிகல் திட்டத்தை ஆதரிக்கிறது. இது உயிரி தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி உதவி கவுன்சில் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம், குறிப்பாக பொது சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள், உயிரியல் மற்றும் மருத்துவ சாதனங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியாவின் புதிய ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு திறன்களை மேம்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201537®=3&lang=1
****
AD/SMB/SH
(रिलीज़ आईडी: 2201805)
आगंतुक पटल : 7