சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
प्रविष्टि तिथि:
10 DEC 2025 5:06PM by PIB Chennai
துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 9.12.2025 அன்று காலை 8 மணியளவில் எமிரேட் விமானம் ஒன்று வந்தடைந்தது. அப்போது சுங்கத்துறையினர் இந்திய பயணி ஒருவரை சோதித்த போது அப்பயணி 9.46 கிலோ கிராம் எடையிலான தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.11.5 கோடி மதிப்பிலான அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியை கைது செய்தனர். அத்துடன், இதை வாங்குவதற்காக காத்திருந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் சுங்கத்துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

***
SS/IR/RJ/RK
(रिलीज़ आईडी: 2201671)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English