வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா தேசிய இயற்கை வேளாண்மை உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஏற்றுமதியை வலுப்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 09 DEC 2025 4:46PM by PIB Chennai

உலகளாவிய இயற்கை வேளாண் பொருட்களின் சந்தை 2019-ல் 112 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, அது 2023-ல் 147.49 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கிரைசல் அறிக்கையின்படி, 2022-ல் உலகச் சந்தையில் இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களின் சந்தை மதிப்பு 1.4% ஆகும் (தோராயமாக ரூ.16,800 கோடி).

தமிழ்நாட்டில் 32,430 ஹெக்டேருக்கு மேல் இயற்கை வேளாண் பயிர்களின் சாகுபடி பரப்பளவு உள்ளது, இதில் 22,145 உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேங்காய் பால், மாம்பழக் கூழ், கருப்பு மற்றும் பச்சை தேயிலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டம் திருத்தப்பட்டு, அதன் 8-வது பதிப்பு 2025 ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தைவான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டு, ஏற்றுமதி வாய்ப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200899&reg=3&lang=1

***

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2201188) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी