ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 'பருத்தி உற்பத்தித் திறன் இயக்கம்': தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் தேர்வு

प्रविष्टि तिथि: 09 DEC 2025 3:05PM by PIB Chennai

பருத்தி சாகுபடி குறைவு, சாதகமற்ற காலநிலை, மண் வளம் பாதிப்பு மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாகச் சமீபத்திய ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும், பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தவும் 2025-26 மத்திய பட்ஜெட்டில் 'பருத்தி உற்பத்தித் திறன் இயக்கம்'  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலநிலைக்கேற்ற மற்றும் பூச்சிகளை எதிர்க்கக்கூடிய உயர் ரக பருத்தி விதைகளை, குறிப்பாக நீண்ட இழை பருத்தியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'குறைந்த பரப்பளவு மற்றும் குறைந்த உற்பத்தித் திறன்' கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நான்கு மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் சிறப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் விரிவுபடுத்தப்படும்.

இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200815&reg=3&lang=1

***

SS/SE/SH


(रिलीज़ आईडी: 2201182) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी