சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஐஎஸ் தென்மண்டல துணை தலைமை இயக்குநராக விஞ்ஞானி திரு சந்தீப் குமார் கனோகியா பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 3:22PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தென்மண்டல துணை தலைமை இயக்குநராக விஞ்ஞானி திரு சந்தீப் குமார் கனோகியா பொறுப்பேற்றுக்கொண்டார். புதுதில்லியில் உள்ள பிஐஎஸ் தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று (டிசம்பர் 8) பொறுப்பேற்றார்.
1989 மார்ச் மாதத்தில் பிஐஎஸ்-ல் பணியில் சேர்ந்த அவர், பெங்களூரு, சண்டிகர், மொகாலி, புதுதில்லி, ஜெய்ப்பூர் ஆகிய அலுவலகங்களில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இதற்குமுன், புதுதில்லியில் பிஐஎஸ்-ன் சேவைகள் துறைத்தலைவராக பணியாற்றினார். மத்திய அரசு அறிவித்த பன்னிரண்டு ‘சாம்பியன் சர்வீசஸ்’ துறைகளில் இந்தியத் தரநிலைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பொருட்களுக்கு கட்டாயப் பதிவேற்ற திட்டமான பிஐஎஸ் கட்டாய பதிவு திட்டத்தை செயல்படுத்துவதிலும் அதன் தொடர் செயல்பாட்டை உறுதிசெய்வதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
***
SS/IR/SH
(रिलीज़ आईडी: 2200998)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English