தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் டிசம்பர் 8 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 08 DEC 2025 3:45PM by PIB Chennai

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடுஅந்தமான் நிக்கோபார்சத்தீஷ்கர்கோவாகுஜராத்கேரளாலட்சத்தீவுமத்தியப்பிரதேசம்புதுச்சேரிராஜஸ்தான்உத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ன் படிஇம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,95,03,855 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) இதுவரை (2025 டிசம்பர் 8) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,096 வாக்குச் சாவடி அலுவலர்கள், 12,43,716 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,40,59,971 கணக்கெடுப்பு படிவங்கள் (99.91%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6,36,44,038 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,21,404 படிவங்கள் (99.98%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,20,557 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200383&reg=3&lang=1

 

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2200571) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी