திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் இந்தியா திட்டம்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:42PM by PIB Chennai
2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம், தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் கைவினைஞர் பயிற்சி திட்டம் போன்ற முக்கிய திட்டங்களின் மூலம், திறன் மேம்பாட்டு மையங்களின் விரிவான கட்டமைப்பு உதவியுடன் திறன், மறு திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சியை நாடு முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வழங்குகிறது, இது மக்களின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது. இந்த முயற்சிகள் பெரிய அளவிலான அணிதிரட்டல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படுகின்றன.
இந்தத் தகவலை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200373®=3&lang=1
***
SS/PVK/SH
(रिलीज़ आईडी: 2200568)
आगंतुक पटल : 10